/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே சித்தாள் உடல் மீட்பு கொலையா என போலீசார் விசாரணை
/
கரூர் அருகே சித்தாள் உடல் மீட்பு கொலையா என போலீசார் விசாரணை
கரூர் அருகே சித்தாள் உடல் மீட்பு கொலையா என போலீசார் விசாரணை
கரூர் அருகே சித்தாள் உடல் மீட்பு கொலையா என போலீசார் விசாரணை
ADDED : ஆக 13, 2024 06:11 AM
கரூர்: கரூரில் தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சித்தாள் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் -திண்டுக்கல் சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியில், நேற்று முன்தினம் இரவு, 8.30 மணி அளவில் புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி, 57, அவருடன் பணிபுரிபவர் தக-ராறு செய்தனர்.
நேற்று காலை, 7.00 மணிக்கு அளவில் முத்தாயி தலையில் ரத்தகாயத்துடன் சடலமாக கிடந்தார். அப்பகுதியினர் அளித்த தகவலின் படி, வெள்ளியணை போலீசார், முத்தாயி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளியான இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாயி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.