ADDED : ஆக 20, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: குப்புச்சிபாளையம், ஒத்தக்கடை துணை மின் நிலையங்களில், இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
குப்புச்சிபாளையம், ஒத்தக்கடை துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால், மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணி ரத்து செய்யப்படுவதால், மின் நிறுத்தமும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

