ADDED : மார் 10, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம்
குளித்தலை- குளித்தலை அடுத்த தோகைமலை பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, குளித்தலை சட்ட சபை தொகுதி அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.