/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பைக் திருடியசகோதரர்கள் கைது
/
கரூரில் பைக் திருடியசகோதரர்கள் கைது
ADDED : மார் 16, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில் பைக் திருடியசகோதரர்கள் கைது
கரூர்:கரூரில் பைக் திருடிய, சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், புகழூர் அருகே உப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார், 23. இவர் கடந்த, 13ல், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, தெற்கு மடவளாகம் தெருவில், யமஹா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, வசந்தகுமார் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பைக்கை திருடியதாக திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த சகோதரர்கள் காளிதாஸ், 27, ராஜா, 29, ஆகியோரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.