/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பராமரிக்கப்படாத செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா
/
பராமரிக்கப்படாத செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா
ADDED : மார் 19, 2025 01:21 AM
பராமரிக்கப்படாத செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா
கரூர்:கரூர் அருகே, செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையின் மூலம் அப்பிபாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. தடுப்பணையில் நீர் வீழ்ச்சிபோல் தண்ணீர் கொட்டுவதால், பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், 12 ஆண்டுகளுக்கு முன் அப்பிபாளையம் பஞ்சாயத்து சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவில் ஊஞ்சல், சிங்கம், புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. தடுப்பணையை பார்வையிட்ட பின், பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். கடந்த, 2021ல் கரூர் மாவட்ட போலீசார், அப்பிப்பாளையம், தாளப்பட்டி பஞ்சாயத்து ஊர்பொதுமக்கள் இணைந்து பூங்காவில் துாய்மை பணி செய்தனர். பின்னர், பூங்கா சரிவர பராமரிக்கப்படாததால், முட்புதராக மாறி விட்டது. அப்பி
பாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தடுப்பணைக்கு வருகின்றனர். பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், பூங்காவை பராமரித்தால்,
அப்பகுதி சுற்றுலாதளம் போல் மாறும் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.