/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு
/
கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு
ADDED : ஏப் 06, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு
குளித்தலை:குளித்தலை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி நித்தியா, 33; தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடால், கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. கடந்த பிப்., 12 மதியம், 12:00 மணிக்கு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.
பின், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, மணவாசி டோல்கேட் அருகே, மனைவி நித்தியா, உறவினர் கவிதா, 35, ஆகிய இருவரும், விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விஜய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் நித்தியா, கவிதா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.