ADDED : ஏப் 15, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி ஆற்றில்மூழ்கி வாலிபர் பலி
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் அருகே, அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காத்தக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் சந்தோஷ் குமார், 18; பெட்ரோல் பங்க் ஊழியர். இவர், நேற்று முன்தினம் சின்னதாராபுரம் அருகே, நன்செய்நல்லுார் பகுதியில், அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி, சந்தோஷ் குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, சந்தோஷ் குமாரின் சகோதரி சங்கீதா, 23, கொடுத்த புகாரின்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.