/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய விடுதி கட்டடம்குளித்தலையில் திறப்பு
/
புதிய விடுதி கட்டடம்குளித்தலையில் திறப்பு
ADDED : ஏப் 16, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய விடுதி கட்டடம்குளித்தலையில் திறப்பு
குளித்தலை:குளித்தலை காவேரி நகரில், ரூ.3.30 கோடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், 100 பள்ளி மாணவர்கள் தங்கும் புதிய விடுதி கட்டடத்தை, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நகராட்சி தலைவர் சகுந்தலா, முன்னாள் மாவட்ட பஞ்., துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், மாஜி யூனியன் குழு தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

