/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்
/
10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்
10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்
10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்
ADDED : செப் 02, 2024 03:03 AM
கரூர் : காவிரி கரையோர பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி திட்-டத்தில், கரூர் மாவட்டத்தில், 10 லட்சம் பனை விதைகள் நடப்-படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் பாலவிடுதி பஞ்.,க்குட்பட்ட குரும்பப்பட்டியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:பனை மரங்கள் அழியாமல் பாதுகாக்கும் வகையில், காவிரிக்க-ரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி செப்., 8 முதல் நடக்க இருக்கிறது. ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,
திருச்சி, தஞ்சாவூர், மயிலாடு-துறை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில் காவிரிக்கரையின் இரு பக்கங்களிலும், 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு விதைகள் நடப்படுகிறது. இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாண-வியர்,
சமூகசேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறு-வனங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து கொள்ளுமாறும் கேட்டுக்-கொள்ளப்படுகிறது. ஒரு கோடி
பனைவிதைகள் நடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்-படும். கரூர் மாவட்டத்தில், 10 லட்சம் பனை விதைகள் நடவு-செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கி-ணைப்பாளர் ராஜவேலு, கரூர் விதைகள் அரக்கட்டளை சந்துரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
முத்துக்குமார் உள்பட பலர் பங்-கேற்றனர்.