/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கர்ம யோகினி சங்கமத்தில்100 பேர் பங்கேற்பு
/
கர்ம யோகினி சங்கமத்தில்100 பேர் பங்கேற்பு
ADDED : மார் 01, 2025 01:32 AM
கர்ம யோகினி சங்கமத்தில்100 பேர் பங்கேற்பு
கரூர்:''நாகர்கோவிலில் நாளை நடக்கவுள்ள, கர்ம யோகினி சங்கமத்தில், கரூரில் இருந்து, 100 பேர் பங்கேற்க உள்ளனர்,'' என, கரூர் மாவட்ட சேவாபாரதி தலைவர் ேஷசாத்திரி தெரிவித்தார்.
இதுகுறித்து, கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவி லில் அமிர்தா பல்கலை
கழக வளாகத்தில் நாளை (2ல்) சாத்வி ராணி அஹல்யாபாய் ேஹால்கரின், 300 வது பிறந்த நாள் விழா, வைபவ ஸ்ரீ மகளிர் சுய உதவிக்குழுவின், 25வது ஆண்டு விழா மற்றும் கர்மயோகினி சங்கமம் நடக்கிறது. அதை, தாய்மை உணர்வை போற்றும் வகையில் சேவாபாரதி அமைப்பு நடத்துகிறது.
அதில், 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில், எம்.ஜி.ஆர்., பல்கலை கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் உள்பட, கல்வியாளர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். கரூர் மாவட்டத்தில் இருந்து, 100 பேர் பங்கேற்க உள்ளனர். அவர்கள், பஸ்கள் மூலம் புறப்பட்டு செல்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.