/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளியை தாக்கிய 2 பேரிடம் விசாரணை
/
தொழிலாளியை தாக்கிய 2 பேரிடம் விசாரணை
ADDED : பிப் 01, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளியை தாக்கிய 2 பேரிடம் விசாரணை
குளித்தலை:குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., தெற்கு மைலாடியை சேர்ந்தவர் சண்முகம், 35; இவர், நேற்று முன்தினம் மைலாடி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து சண்முகம் அளித்த புகார்படி, குளித்தலை போலீசார், அர்ஜுனன், சின்னத்தம்பி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.