/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு சமையல் உதவியாளர் பணிஏப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம்
/
சத்துணவு சமையல் உதவியாளர் பணிஏப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம்
சத்துணவு சமையல் உதவியாளர் பணிஏப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம்
சத்துணவு சமையல் உதவியாளர் பணிஏப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 11, 2025 01:23 AM
சத்துணவு சமையல் உதவியாளர் பணிஏப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம்
கரூர்: சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு வரும், 26க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக, நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும்.
சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள, சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
ஓராண்டு பணிக்கு பின்பு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட துாரம், 3 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை https://karur.nic.in/ இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 26க்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.