/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 15, 2024 01:14 AM
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
கரூர், செப். 15-
கரூர் மாவட்ட கூட்டுறவு நலத்துறை சார்பில், பணியாளர்கள் குறைதீர் கூட்டம், கரூர் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள, பணியாளர்கள் தங்களுடைய குறைகளை, கடிதம் மூலமாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜாவிடம் வழங்கினர். குறைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என, பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
குறைதீர் கூட்டத்தில், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், பிச்சை வேலு, அருண்மொழி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியர் அபிராமி, குளித்தலை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் திருமதி உள்பட பலர் பங்கேற்றனர்.