/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எல்லம்மாள் ரேணுகாதேவி கோவில் கும்பாபிேஷக விழா
/
எல்லம்மாள் ரேணுகாதேவி கோவில் கும்பாபிேஷக விழா
UPDATED : ஜூலை 04, 2024 10:40 AM
ADDED : ஜூலை 02, 2024 06:45 AM
கிருஷ்ணராயபுரம் : கோடங்கிப்பட்டி கிராமத்தில், எல்லம்மாள் ரேணுகாதேவி கோவில் கும்பாபி ஷேக விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோடங்கிப்பட்டி கிராமத்தில் எல்லம்மாள், ரேணுகாதேவி கோவில் உள்ளது. கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு கடந்த, 30ல் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து யாக வேள்வி பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, 6:35 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், மஹா சங்கல்பம், வாஸ்து பூஜை, நடத்தப்பட்டது. 10:30 மணிக்கு கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு, புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.