ADDED : செப் 10, 2024 05:25 AM
கி.புரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சின்னவெங்காயம் அறுவடை கார-ணமாக விலை குறைந்து விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, பாப்ப-காப்பட்டி, வயலுார், திருமேனியூர், குழந்தைப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது
வெங்காயம் அறுவடை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் வெங்காயம் உலர்த்தப்பட்டு கரூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்படும் மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்கப்படுகி-றது.தற்போது பல
பகுதிகளில் இருந்து, சின்ன வெங்காயம் வரத்து காரணமாக விலை சரிந்துள்ளது. இதில் கடந்த மாதம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று கிலோ, 30 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி
செல்-கின்றனர். இதனால் விவசாயிகள் ஓரளவு மட்டுமே வருமானம் கிடைத்து வருவதாக கூறினர்.

