ADDED : பிப் 15, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹோட்டலில்தீ விபத்து
நாமக்கல்:நாமக்கல் - சேலம் சாலையில் தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று காலை 10:30 மணிக்கு சமையல் கூடத்தில், ஊழியர்கள் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள புகை போக்கியில் திடீரென தீப்பற்றியது. அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், அங்கிருந்த காஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தி, மேற்கூரையை பெயர்த்து எடுத்து தண்ணீரை பீய்ச்சியடித்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

