/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார் கவிழ்ந்து விபத்து4 பேர் படுகாயம்
/
கார் கவிழ்ந்து விபத்து4 பேர் படுகாயம்
ADDED : ஜன 18, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி,: கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஆனைக்கால் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார், 26. இவர், உறவினர்களுடன், காரில் கேரள மாநிலம் சென்று கொண்டிருந்தார்.
காரை, நரேன்குமார், 41, ஓட்டினார். அரவக்குறிச்சி அருகே, கணவாய் மேடு பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, டயர் பஞ்சராகி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராம்குமார், நரேன்குமார், இவரது மனைவி ஆர்த்தியா, இவரது மகன் சோமசேகர் ஆகிய, 4 பேர் படுகாய
மடைந்தனர். அவர்கள் நால்வரையும் மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.