/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் 395 இடங்களில்பொங்கல் விளையாட்டு போட்டி
/
மாவட்டத்தில் 395 இடங்களில்பொங்கல் விளையாட்டு போட்டி
மாவட்டத்தில் 395 இடங்களில்பொங்கல் விளையாட்டு போட்டி
மாவட்டத்தில் 395 இடங்களில்பொங்கல் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 17, 2025 01:07 AM
மாவட்டத்தில் 395 இடங்களில்பொங்கல் விளையாட்டு போட்டி
கரூர்: கரூர் மாவட்டத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் நாளாக, 395 இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
தமிழகத்தில் கடந்த, 13 முதல் பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. நேற்று மூன்றாவது நாளாக, குளித்தலையில், 65, வேலாயுதம்பாளையத்தில், 52, வெங்கமேட்டில், 43, வாங்கல், 44, தான்தோன்றிமலை, 30, சின்னதாராபுரம் 30, தென்னிலை, 10, க. பரமத்தி 14, வெள்ளியணை 13, மாயனுார், 37, லாலாப்பேட்டை 39, பாலவிடுதி, 18, என மொத்தம், 395 இடங்களில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
காலை சுழன்று பந்து அடித்தல், உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.