/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட கால்பந்து போட்டி: பள்ளப்பட்டி பள்ளி தகுதி
/
மாவட்ட கால்பந்து போட்டி: பள்ளப்பட்டி பள்ளி தகுதி
ADDED : ஆக 22, 2024 01:41 AM
அரவக்குறிச்சி, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த. குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதால், பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டி, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. பள்ளப்பட்டி, ஈசநத்தம், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் முதலிடம் பெற்று, மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதே போல, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவிகள் முதலிடம் பெற்று, மாவட்ட அளவில் விளையாடும் தகுதி பெற்றனர். மேலும், 14, 17 வயதுக்குட்பட்டவர் பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.