/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி
ADDED : ஆக 13, 2024 07:53 AM
குளித்தலை: குளித்தலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்-புணர்வு பிரசாரம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்-றது.
குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். போதை பொருள் ஒழிப்பு குறித்து எம்.எல்.ஏ., பேசினார். பின்னர் உறுதி-மொழி எடுக்கப்பட்டது. டி.எஸ்.பி.. செந்தில்குமார், தாசில்தார் சுரேஷ், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது, யூனியன் மேலாளர் திரு-ஞானம், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்-டனர்.
பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடம், பேராளம்மன் கோவில் தெரு வழியாக பஸ் ஸ்டாண்டு. காந்தி சிலை சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்-தது.
* கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப்-பொருள் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மாணவர்க-ளுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிருஷ்ணராய-புரம் பஸ் ஸ்டாப், கடைவீதி வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மண்டல தாசில்தார் சந்தான செல்வம், மாயனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வருவாய்த்துறை சேர்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரி-யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

