/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மார்க்கெட் நுழைவு வாயிலை பூட்டி 'சீல்' வைத்த நகராட்சி காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
/
மார்க்கெட் நுழைவு வாயிலை பூட்டி 'சீல்' வைத்த நகராட்சி காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
மார்க்கெட் நுழைவு வாயிலை பூட்டி 'சீல்' வைத்த நகராட்சி காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
மார்க்கெட் நுழைவு வாயிலை பூட்டி 'சீல்' வைத்த நகராட்சி காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
ADDED : ஆக 24, 2024 07:10 AM
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில், 150க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடை நடத்தும் வியாபாரிக-ளுக்கு, வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்டப்பட்-டுள்ளன. கடந்த, 19ம் தேதி முதல் புதிய கட்டடத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படும் என நகராட்சி அறிவித்து, பிளக்ஸ் பேனரும் வைத்தது. ஆனால், வியாபாரிகள் அங்கு செல்லாமல், பழைய மார்க்கெட் கடைகளில் வியாபாரம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தினசரி காய்கறி மார்க்கெட் நுழைவு-வாயிலை, நகராட்சி ஊழியர்கள் பூட்டி 'சீல்' வைத்தனர். நக-ராட்சி செப்டிக் மற்றும் கழிவுநீர் வாகனங்களை நுழைவாயில் முன் நிறுத்தினர். இதனால் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஆவேசத்தால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விற்ப-னைக்கு கொண்டு வந்த காய்கறிகளை, சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வியாபாரிக-ளுக்கு ஆதரவாக புளியம்பட்டி-பவானிசாகர் சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் சில கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் காய்கறிகளை வாங்க வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்-தியும் முடிவு எட்டாமல், நகராட்சி அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.,கண்ணப்பன் தலைமையில் மதியம் பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் கோபால் கூறியதாவது: மார்க்கெட்டில், ௨௦ ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகிறோம்.
புதிய கட்டடத்தில் கடைகளை ஒதுக்க, நகராட்சியில், ௧௦ ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். ஒரு வியாபாரியால் எப்படி அவ்வ-ளவு பணம் கொடுக்க முடியும். மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகளை ஒதுக்க கோர்ட் உத்தரவிட்-டுள்ளது. ஆனால், கோர்ட் உத்தரவை மீறி நகராட்சி செயல்படுகி-றது. இவ்வாறு கூறினர்.
இன்று முதல் புது மார்க்கெட் செயல்படும்...
புதிய வாரச்சந்தை வளாகத்தில் கடை ஒதுக்குமாறு, 163 வியாபா-ரிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் குலுக்கல் முறையில் குடும்பத்துக்கு ஒரு கடை ஒதுக்கப்படும். ஒரு கடைக்கு நாள் ஒன்-றுக்கு, 120 ரூபாய் சுங்கம் வசூலிக்கப்படும். நாளை (இன்று) முதல் புது காய்கறி மார்க்கெட் செயல்படும் என முடிவு செய்யப்-பட்டது. இதற்கு வியாபாரிகள் சம்மதித்து கையெழுத்திட்டனர். இதனால் மாலை, 5:௦௦ மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்-தது. தினசரி மார்க்கெட் நுழைவு வாயில் சீல் அகற்றப்பட்டு திறக்-கப்பட்டது.