/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் தீவிரம்
/
மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் தீவிரம்
ADDED : ஆக 30, 2024 01:16 AM
மானாவாரி நிலங்களில்
உழவு பணிகள் தீவிரம்
கரூர் ஆக. 30--
தான்தோன்றிமலை, கடவூரில் மானாவாரி சாகுபடிக்காக நிலத்தை உழவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி என இரு ஆறுகள் ஓடினாலும், அதனால் பயன் பெறும் விவசாய நிலப்பரப்பு மிகவும் குறைவாகும். மாவட்டத்தின் பெரும்பகுதி மானாவாரி விவசாயமே நடக்கிறது. கடவூர், தான்தோன்றிமலை ஆகிய ஒன்றிய பகுதிகளில் அதிகளவில் மானாவாரி விவசாயம் நடக்கிறது.
ஆவணி, -புரட்டாசி பட்டத்தில் நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக, மானாவாரி நிலங்களில் ஈரம் அதிகம் இருந்தது. இந்த ஈரத்தை கொண்டு, மானாவாரி நிலங்களில் டிராக்டர் கொண்டு உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பெய்யும் மழையை கொண்டு சோளம், துவரை, எள், சூரியகாந்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் என மானாவாரி நிலங்களில் விளைச்சல் தரக்கூடிய பயிர்களை பயிர் செய்கின்றனர்.

