/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பழங்குடியினர் துறை சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கையை கைவிட அரசுக்கு கோரிக்கை
/
பழங்குடியினர் துறை சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கையை கைவிட அரசுக்கு கோரிக்கை
பழங்குடியினர் துறை சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கையை கைவிட அரசுக்கு கோரிக்கை
பழங்குடியினர் துறை சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கையை கைவிட அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 11:57 PM
கரூர் : பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசி-ரியர் பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை வைத்த சங்க நிர்-வாகிகள் மீது நடவடிக்கையை கைவிட வேண்டும் என, தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா தெரிவித்-துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறையில், 328 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம், 29,774 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அதில், 439 ஆசிரி-யர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக நிரப்பப்ப-டாமல், தற்காலிக தொகுப்பூதிய பணி நிரவல் மூலம் சமாளிக்கப்-பட்டு வந்தன. கடந்த, 7 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி-யாற்றும், 300 ஆசிரியர்கள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்-லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆசிரியர் காப்-பாளர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு எதி-ராக, தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், 19-வது பிரிவின்படி அரசு ஊழியர்கள் சங்கங்கள் வைத்து கொள்ளவும், தங்களது கோரிக்கைகளை குறிப்பிட்ட எல்-லைக்குள் வெளிப்படுத்தவும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்-களில் ஈடுபடவும் உரிமை உள்ளது. அதன்படி கருத்து தெரிவித்த நிர்வாகிகள் மீதான, பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழங்குடியினர் நலத்துறை நிர்வாகத்தின் மீது பல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை இந்த துறைக்கு இயக்குனராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில், கூறப்பட்டுள்-ளது.

