ADDED : ஜூலை 26, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
கரூர்;கரூர் மாவட்ட, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக குருநாதன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
கரூர்
மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜசேர்வை,
தோகைமலை சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம்
போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த குருநாதன், கரூர் மாவட்ட
தனிப்பிரிவுக்கு மாற்றி, திருச்சி சரக டி.ஐ.ஜி., சிபி சக்கரவர்த்தி
கடந்த, 21ல், உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று கரூர் மாவட்ட
தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக குருநாதன், கரூர் எஸ்.பி.,
அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, தனிப்பிரிவு
காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
