/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 25, 2024 01:32 AM
கரூர்:கரூர்
மாவட்டம், கடவூர் வட்டாரத்தில் வருவாய்த்துறை சார்பில்
பொதுமக்களிடம், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், தேர்தல் துணை அலுவலர்
இளம்பரிதி தலைமை வகித்தார். பொதுமக்கள், 100 சதவீதம் வாக்களிக்க
வேண்டும் எனக்கோரி தாரை, தப்பட்டை முழக்கத்துடன் வீதி வீதியாக சென்று
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
கடவூர் பஸ் ஸ்டாண்ட்,
பாலவிடுதி, திண்டுக்கல் மெயின் ரோடு, கடவூர் வடக்கு, தெற்கு, மேற்கு
போன்ற பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 85 வயது
பூர்த்தியடைந்த வயது முதிர்ந்தவர்களுக்கும், 18 வயது
பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுக்கும் அழைப்பிதழை வழங்கினர்.
வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கடவூர் பஞ்., தலைவர் செல்லமுத்து உள்பட
பலர் பங்கேற்றனர்.

