/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிப்.,23ல் மாவட்ட அளவில்சிறுதானிய திரு விழா
/
பிப்.,23ல் மாவட்ட அளவில்சிறுதானிய திரு விழா
ADDED : பிப் 20, 2025 01:56 AM
பிப்.,23ல் மாவட்ட அளவில்சிறுதானிய திரு விழா
கரூர்:மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா வரும், 23ல் நடக்கிறது என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மனிதன் ஆரோக்கியமாக வாழ, சமச்சீர் உணவு மிகவும் அத்தியாவசியமாகும். தொடர்ந்து அரிசி உணவையே சாப்பிடுவதால், கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே கிடைக்கிறது. தாது உப்புகள், வைட்டமின்கள், சத்துமிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி, திணை, வரகு, குதிரைவாலி, சாமை ஆகியவற்றில் அதிகளவில் உள்ளது. உணவில் ஊட்டச்சத்து மிக்க தானியங்களை சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியம் மேம்படுகிறது.
சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வேளாண் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில் நுட்பங்களை, விவசாயிகளிடையே பரவலாக்கும் பொருட்டும், வாங்கலில் உள்ள வாங்கலம்மன் திருமண மண்டபத்தில் வரும் 23 காலை, 10:00 மணிக்கு மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா, கருத்தரங்கம் நடக்கிறது.
மின்துறை அமைச் சர் செந்தில்பாலாஜி கலந்து கொள்கிறார். வேளாண் பல்கலைக்கழக நிபுணர்கள், வேளாண்மை துறையுடன் இணைந்து, பல்வேறு சார்பு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர, பல்வேறு கருத்து காட்சி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

