/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தபால் ஓட்டு போட்ட 3,233 வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
/
தபால் ஓட்டு போட்ட 3,233 வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
தபால் ஓட்டு போட்ட 3,233 வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
தபால் ஓட்டு போட்ட 3,233 வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ADDED : ஏப் 06, 2024 03:54 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 3,233 பேரிடம் தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டது.
கரூர் லோக்சபா தொகுதியில், கிருஷ்ணராயபுரம் அருகில் மேட்டுத்திருக்காம்புலியூரில், தபால் ஓட்டு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்க வேல் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களிடம் இருந்து தபால் ஓட்டு பெறப்பட்டு வருகிறது. அவர்கள் ஓட்டளிக்க ஏதுவாக, 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு, தபால் ஓட்டுக்கள் பாதுகாப்புடன் பதிவு செய்யப்பட்டது.
அந்த தபால் ஓட்டுக்கள், பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று மூடி முத்திரையிட்டு போலீஸ் மூலம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், 'சிசிடிவி' கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட, 1,804 வாக்காளர்கள், 1,429 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம், 3,233 வாக்காளர்கள் வீட்டிலிருந்து படிவம்-12டி மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம், நேரடியாக சென்று தபால்
ஓட்டுக்கள் பெறப்பட்டது.
இவ்வாறு கூறினார்.