/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
6 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை தேர்தல் அலுவலர் அறிவிப்பு
/
6 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை தேர்தல் அலுவலர் அறிவிப்பு
6 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை தேர்தல் அலுவலர் அறிவிப்பு
6 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை தேர்தல் அலுவலர் அறிவிப்பு
ADDED : ஏப் 17, 2024 02:07 AM
கரூர்:கரூர்
மாவட்டத்தில், ஆறு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
விடப்பட்டுள்ளது என, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்பதாவது: கரூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல்
ஓட்டுப்பதிவை முன்னிட்டு, இன்று முதல் 19ம் தேதி வரை மற்றும் ஓட்டு
எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ல், மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படும்
ஏப்., 21-, மற்றும் மே 1- ஆகிய ஆறு நாட்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள
டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கு விடுமுறை
அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி கடை மேற்பார்வையாளர்கள்,
விற்பனையாளர்கள் அல்லது பார் உரிமையாளர்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.