/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.39.94 லட்சம் மதிப்புள்ள காய்கறி, பழங்கள் விற்பனை
/
ரூ.39.94 லட்சம் மதிப்புள்ள காய்கறி, பழங்கள் விற்பனை
ரூ.39.94 லட்சம் மதிப்புள்ள காய்கறி, பழங்கள் விற்பனை
ரூ.39.94 லட்சம் மதிப்புள்ள காய்கறி, பழங்கள் விற்பனை
ADDED : ஜன 15, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,: கரூர் உழவர் சந்தையில் கடந்த, மூன்று நாட்களில், 39.94 லட்ச ரூபாய் மதிப்பில் காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் விழா கடந்த, 13ல் போகியுடன் தொடங்கியது. இதனால், கரூர் உழவர் சந்தையில் காய்கள், பழங்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். கடந்த, 12 முதல் நேற்று வரை கடந்த மூன்று நாட்களில் மட்டும், 66 ஆயிரத்து, 415 கிலோ காய்கறிகளும், 5,090 கிலோ பழங்களும், 2,150 கிலோ மலை காய்களும் விற்றுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு, 39 லட்சத்து, 94 ஆயிரத்து, 865 ரூபாய். 401 விவசாயிகள், 12 ஆயிரத்து, 276 பொதுமக்கள் கடந்த, மூன்று நாட்களில், கரூர் உழவர்
சந்தைக்கு வந்துள்ளனர்.