/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னிலை நூலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம்
/
தென்னிலை நூலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம்
ADDED : ஆக 20, 2024 02:55 AM
கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலையில் கடந்த, 22 ஆண்டுகளாக தெற்கு கிராம பஞ்., க்கு சொந்தமான கட்டடத்தில் ஊர்ப்புற நுாலகம் செயல்பட்டு வருகிறது. அதில், தென்னிலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 345 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக, கரூர் தும்பிவாடியை சொந்த ஊராக கொண்ட, சென்னை மாநகராட்சி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி பெரும் புரவலாக இருந்து வருகிறார்.
நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள், நாவல்கள், வரலாற்று புத்தகங்கள் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பில் வைக்கப்பட் டுள்ளது. ஆனால், புத்தகங்களை வைக்க போதிய அலமாரிகள் இல்லாததால், தரையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நூலகத்துக்கு மின் இணைப்பு இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நூலகத்துக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தென்னிலை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கரூர் மாவட்ட நூலக பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், தென்னிலையில், தெற்கு பஞ்., வளாகத்தில் புதிய நூலக கட்டடம் கட்ட, 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாக அனுமதி மற்றும் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், விரைவில் புதிய நுாலகம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.