/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டுகோள்
/
குளித்தலை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டுகோள்
குளித்தலை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டுகோள்
குளித்தலை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 04, 2024 03:08 AM
குளித்தலை;குளித்தலை அரசு மருத்துவமனையில், ரத்த வங்கி துவங்க வேண்டும்.
குளித்தலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாயனுார், பஞ்சப்பட்டி, தோகைமலை, நச்சலுார், அய்யர்மலை மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம், கொளக்குடி, பவித்திரம் மற்றும் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொது மக்கள், இந்த மருத்துவமனையில் தொடர் சிகிச்சை, பிரசவ சிகிச்சைக்கு வருகின்றனர்.
மேலும், கருர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை, கிராமச்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அல்லது கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரசவ வார்டு பகுதி சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து மாநில அளவில் விருதுகள் பெற்று வருகிறது. இந்த சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு ரத்த வங்கி செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் போதிய சட்ட விதிகளுக்கு ஏற்ப வசதிகள் இல்லாததால் ரத்த வங்கி மூடப்பட்டது. அதிகளவு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் போது, நோயாளிகளின் உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சென்று ரத்தம் கொடுக்கப்பட்டு, மறுநாள் நோயாளிக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. இதனால் நோயாளிகள், உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், புதியதாக ரத்த வங்கி அமைக்கப்படும் என, அமைச்சர் சுப்பிரமணி விழா ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும், மருத்துவமனையில் ரத்த வங்கி தொடங்கப்படவில்லை. கர்ப்பணிகள், விபத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நலன் கருதி, ரத்த வங்கியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.