/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஆக 20, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர்
மாவட்டம், புஞ்சை புகழூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மனோஜ் குமார்,
20; இவர் நேற்று முன் தினம் அதிகாலை, பஜாஜ் பல்சர் பைக்கில்
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை கருப்பம்பாளையம் பிரிவில் சென்று
கொண்டிருந்தார்.
அப்போது, கிருஷ்ணகிரி சீனிவாச காலனியை சேர்ந்த
நவீன்குமார், 20, ஓட்டி சென்ற கார், மனோஜ் குமார் மீது மோதியது.
தலையில் படுகாயம் அடைந்த மனோஜ் குமார், திருச்சி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

