/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலை திருவிழா போட்டி: பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி
/
கலை திருவிழா போட்டி: பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஆக 30, 2024 04:27 AM
கரூர்: கலை திருவிழா போட்டிக்கு, வெள்ளியணை அரசு பள்ளியில் மாணவ, மாணவியர் ஒத்திகை செய்தனர்.
வெள்ளியணை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கலை திருவிழா ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான போட்டிகள் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான போட்டிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இன்று தொடங்குகிறது. இதற்காக முதல், இரண்டாம் வகுப்பிற்கு தனி பிரிவாகவும், 3, 4, 5ம் வகுப்புகளுக்கு தனி பிரிவாகவும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதை கூறுதல், மழலையர் பாடல், வண்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி, மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், தேசபக்தி பாடல்கள் பாடுதல், மெல்லிசை தனிப்பாடல், திருக்குறள் ஒப்புவித்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளியளவில் நடக்கும் போட்டியில், மாணவர்களை தயார் செய்யும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

