/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்
/
சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்
சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்
சாலையோரம் சாக்கடை கழிவு அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம்
ADDED : ஆக 18, 2024 03:24 AM
கிருஷ்ணராயபுரம்,: லாலாப்பேட்டை, கொடிக்கால் தெரு பகுதியில் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவுகளை முழுமையாக அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, கடைவீதி, பழைய நெடுஞ்சாலை ஆகிய பகுதியில் சாக்-கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் பகுதியில் அதிகளவு கழிவுகள் தேங்கி, தொடர்ந்து கழிவுநீர் செல்ல வழியின்றி காணப்-பட்டது. இதையடுத்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவுகளை அள்ளி, சாலையோரம் குவித்-தனர். தற்போது கால்வாயில் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்கி-றது. ஆனால், சாக்கடை கழிவுகளை முழுமையாக அகற்றா-ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்-பதால், மீண்டும் கழிவுகள் சாக்கடை கால்வாயில் தேங்க வாய்ப்-புள்ளது. அதனால், கழிவுகளை முழுமையாக அகற்ற, பஞ்., நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.