/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறுவைக்கு தண்ணீர் திறக்கும் முன் புகளூர் கதவணையில் சுறுசுறு பணி
/
குறுவைக்கு தண்ணீர் திறக்கும் முன் புகளூர் கதவணையில் சுறுசுறு பணி
குறுவைக்கு தண்ணீர் திறக்கும் முன் புகளூர் கதவணையில் சுறுசுறு பணி
குறுவைக்கு தண்ணீர் திறக்கும் முன் புகளூர் கதவணையில் சுறுசுறு பணி
ADDED : மே 01, 2024 08:33 PM

கரூர்:கரூர் மாவட்டம், புகழூரில் காவிரியாற்றின் குறுக்கே, கரூர் - நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், 406.50 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது.
அதற்கு, நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது. இதையடுத்து, 2020 நவம்பரில் கதவணை கட்டும் பணி துவங்கப்பட்டது. பிறகு, கதவணை கட்டும் பணி விறு விறுப்பாக நடந்தது. இந்நிலையில், டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு கடந்தாண்டு ஜூன் மாதம், 12ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கதவணை பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. பிறகு, தண்ணீர் வரத்து குறைந்ததால், கதவணை கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஜனவரி, 28ல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, குடிநீருக்காக மட்டும் ஆற்றில் வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், கதவணை கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கதவணையில், 72 துாண்கள் கட்ட திட்டமிடப்பட்டு, பணி நிறைவு பெற்றுள்ளது. கரூர் பகுதியில், கதவணையின் மேல் பகுதியில், தரைத்தளம் அமைக்கும் பணி துவங்கிஉள்ளது.
மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12 அல்லது அதற்கு முன் தண்ணீர் திறக்க வாய்ப்புண்டு. அதற்குள், தரைத்தளம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். கோடை காலத்தில் மழை பெய்யாத பட்சத்தில், கதவணை கட்டும் பணி அதிவேகத்தில், தொய்வு இல்லாமல் நடக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

