/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண் பரிசோதனை அடிப்படையில் நிலங்களுக்கு உரமிடுதல் அவசியம்
/
மண் பரிசோதனை அடிப்படையில் நிலங்களுக்கு உரமிடுதல் அவசியம்
மண் பரிசோதனை அடிப்படையில் நிலங்களுக்கு உரமிடுதல் அவசியம்
மண் பரிசோதனை அடிப்படையில் நிலங்களுக்கு உரமிடுதல் அவசியம்
ADDED : செப் 01, 2024 04:22 AM
கரூர்: மண் பரிசோதனை அடிப்படையில், விவசாய நிலங்களுக்கு உர-மிடுதல் அவசியம் என, வேளாண் அலுவலர் ஸ்ரீபிரியா தெரி-வித்தார்.
கரூர் மாவட்ட வேளாண்துறை சார்பில், கடவூர் அருகில் சின்னி-யம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளின் மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அலுவலர் ஸ்ரீபிரியா தலைமை வகித்து பேசியதாவது:
விவசாயிகள் மண் வளத்தை ஆய்வு செய்து, உரமிட்டால் எந்த ஒரு பயிரிலும் அதிக மகசூல் பெறலாம். இதற்காக, வேளாண் துறை சார்பில் ஏமூர் நடுப்பாளையத்தில் நடமாடும் மண் பரிசோ-தனை நிலையம் செயல்படுகிறது. மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து, அவற்றிற்கேற்ப உரம் பரிந்துரைகள் வழங்கப்படு-கிறது. இவ்வாறு மண், நீர் பரிசோதனை செய்து அதற்கேற்ப உர-மிடுவதன் மூலம் விவசாயிகளின் உரச்செலவு குறைவதுடன் மண்-வளமும் காக்கப்படுகிறது. இந்த மண், நீர் பரிசோதனைக்கு ஆய்வுக் கட்டணமாக, 30 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர், கூறினார்.
மற்றொரு வேளாண் அலுவலர் ரசிகப்பிரியா கூறுகையில், ''வேளாண்துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் அசோஸ்பை-ரில்லாம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் மொபி-லைசிங் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை மண்ணில் இடு-வதால், 25 சதவீதம் வரை தழை, மணி, சாம்பல் சத்துகளின் தேவை குறைவதோடு, 20 சதவீதம் வரையிலான மகசூலும் அதி-கரிக்கிறது,'' என்றார்.