/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடின்றி முடக்கம்
/
புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடின்றி முடக்கம்
புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடின்றி முடக்கம்
புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடின்றி முடக்கம்
ADDED : மே 04, 2024 09:56 AM
கிருஷ்ணராயபுரம்: நரசிங்கபுரத்தில், குடிநீர் தொட்டி கட்டப்பட்டு செயல்பாடு இன்றி முடங்கியுள்ளதால் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம், புனவாசிப்பட்டி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு மூன்று மாதத்துக்கு மேல் ஆகிறது. தொட்டியில் நீர் ஏற்றி மக்களுக்கு வினியோகம் செய்யப்படவில்லை.
கோடை காலமான தற்போது போதுமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி தொடர்கிறது. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றி, முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.