/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரிசெலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
/
வரிசெலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
வரிசெலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
வரிசெலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
ADDED : ஜூலை 07, 2024 02:55 AM
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி நகராட்சியில், வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, நகராட்சி ஆணையர் பால்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளில், 2023-24ம் ஆண்டிற்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல், நிலுவையில் வைத்துள்ள குடிநீர் இணைப்புதாரர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே, நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் நிலுவையாக வைத்துள்ள சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.