/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புனரமைத்தபள்ளி கட்டடங்கள் காணொலியில் திறப்பு
/
புனரமைத்தபள்ளி கட்டடங்கள் காணொலியில் திறப்பு
ADDED : ஜூலை 20, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை;குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளியில் உள்ள பழைய கட்டடம் மற்றும் வகுப்பறைகள் புனரமைப்பு செய்யப்பட்டது.இந்த தகைசால் பள்ளி புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடங்களை நேற்று காலை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ., மாணிக்கம் குத்துவிளக்கேற்றினார்.தொடர்ந்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். தலைமை ஆசிரியர் அனிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி ரேவதி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் மஞ்சுளா, சுகன்யா மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.