/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைக்கு பின் நந்தியாவட்டை பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு
/
மழைக்கு பின் நந்தியாவட்டை பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு
மழைக்கு பின் நந்தியாவட்டை பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு
மழைக்கு பின் நந்தியாவட்டை பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூன் 30, 2024 03:36 AM
ஆத்துார்: கோடை மழைக்கு பின் நந்தியாவட்டை செடிகளில் பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே மல்லியக்கரை, கருத்தராஜாபாளையம், அரசநத்தம், ஈச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மல்லி, சன்னமல்லி, நந்தியாவட்டை, அரளி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்துள்ளனர். கோடை மழைக்கு பின் மல்லிகை, நந்தியாவட்டை செடிகள் துளிர் விட்டு பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்தராஜா
பாளையம் என்.செல்வி, 42, கூறியதாவது:
கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், நந்தியாவட்டை பூ செடி பதியத்தை வாங்கி வந்து, 20 சென்ட் நிலத்தில், 50 செடிகள் நடவு செய்யப்பட்டன. இவை, 1 அடி ஆழம் மற்றும் அகலம் குழி எடுத்து, நடவு செய்யப்படுகின்றன. இச்செடிகளில் பூச்சி தாக்கம் இருக்காது. 5 மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை எரு அல்லது யுரியா உரம் போடப்படும். இவை மரப்பயிர் போன்று அதிகம் வளரும். ஆனால், 6 அடி மற்றும்
8 அடிக்கு மேல் வளராமல்
ஒடித்துவிட வேண்டும்.
அப்போதுதான் பக்க கிளைகள் அதிகம் வளரும். செடி நடவு செய்த, 3 முதல், 4 மாதங்களில் பூ வர ஆரம்பிக்கும். 2 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்துள்ள செடி என்பதால் செடிக்கு தலா, 100 கிராம் வரை பூக்கள் மகசூல் என, 10 முதல், 15 கிலோ மகசூல் இருக்கும். பூ எடுக்கும்போது, பச்சை காம்புகளுடன் ஒடித்து எடுக்க வேண்டும்.
அப்படி ஒடிக்கும்போது பால் வரும். அந்த பால் கையில் ஒட்டிக்கொண்டால் சிலருக்கு காயம் ஏற்படும். அதனால்
பூக்களை எடுக்கும்போது கையுறை அணியலாம்.
முகூர்த்த நாளில் கிலோ, 200 முதல், 1,000 ரூபாய் வரை விற்கும். தற்போது முகூர்த்தம் இல்லாததால் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கிறோம். திருமணத்தின்போது மணமக்களுக்கு இந்த பூவில் பல வண்ணங்கள் தடவி மாலை கட்டி வியாபாரிகள் விற்கின்றனர்.
மல்லிகை பூவுக்கு மாற்றாக, நந்தியாவட்டை பூவை பயன்படுத்துகின்றனர். தினமும் வருவாய் கொடுக்கும் பூவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.