/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில் ஆள் மாறாட்டம்
/
எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில் ஆள் மாறாட்டம்
ADDED : ஜூலை 04, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூரில், எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வில், ஆள் மாறாட்டம் நடந்துள்ளதா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், நேற்று எஸ்.எஸ்.எல்.சி., துணைத்தேர்வு ஆங்கில பாடப்பிரிவுக்கு நடந்தது. கரூர் மாவட்டத்தில், நான்கு மையங்களில், 1,064 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த, எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கில துணைத் தேர்வில், நெரூரை சேர்ந்த, 18 வயது மாணவனுக்கு பதிலாக, அதே பகுதியை, 20 வயது மாணவர் தேர்வு எழுதியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.