/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஆக 21, 2024 01:53 AM
மதுர காளியம்மன் கோவில்
கும்பாபிஷேகம் கோலாகலம்
குளித்தலை, ஆக. 21-
குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., பூசாரிப்பட்டியில் வெற்றி செல்வ விநாயகர், மதுர காளியம்மன், பாலமுருகன், கருப்பண்ணசாமி, கன்னிமார் அம்மன், பாம்பலம்மன் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, குளித்தலை காவிரி நதியில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின், முதல்கால பூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, மூலவர்களுக்கு கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.