/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க.,கொடி கட்ட அனுமதி மறுத்தால் போராட்டம்
/
அ.தி.மு.க.,கொடி கட்ட அனுமதி மறுத்தால் போராட்டம்
ADDED : டிச 07, 2024 06:44 AM
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., நிகழ்ச்சிகளுக்கு கொடி கட்ட அனுமதி மறுத்தால், போராட்டம் நடத்தப்படும்,'' என, மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம் மனு கொடுத்த பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., நிகழ்ச்சிகளுக்கு, கொடி கட்ட போலீசார்
அனுமதி அளிப்பது இல்லை. இது
குறித்து புகார் தெரிவித்தால், எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆகியோர் தங்கள் கவனத்துக்கு வரவில்லை என்கின்றனர். போலீசாரை
யார் இயக்குகின்றனர் என தெரியவில்லை. மணல் கடத்தல் குறித்து, கலெக்டரிடம் புகார் அளித்த, அ.தி.மு.க., நிர்வாகி
செல்வராஜ் மீது பொய் வழக்குகளை போட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அ.தி.மு.க.,வினர்
மீதும், பொய் வழக்-குகளை போடுகின்றனர்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலரின், இல்லத் திருமணத்துக்கு கூட, கொடி கட்ட அனுமதி இல்லை என்கின்றனர். எஸ்.பி.,
யிடம் புகார் தெரிவித்த பிறகு அனுமதிக்கின்றனர். கரூரில், அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடவே, இரண்டு
இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, அ.தி.மு.க., நிகழ்ச்சிகளுக்கு கொடி கட்ட அனுமதி மறுத்தால்,
பொதுச்செயலர் இ.பி.எஸ்.,ன் அனுமதி பெற்று போராட்டம் நடத்-தப்படும். இவ்வாறு கூறினார்.
மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ.,பேரவை செயலர் நெடுஞ்செழியன், வழக்கறிஞர் அணி செயலர் சுப்பிரமணி,
முன்னாள் அரசு வழக்கறிஞர் கரிகாலன் உடனிருந்தனர்.