/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டுகோள்
/
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 07, 2024 03:44 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சி யில் உள்ள, தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பழமையான கட்டண கழிப்பிடம் உள்ளது. மேலும் இங்கு கட்டப்பட்டுள்ள, இலவச பொது கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது. திருச்சி, கரூர் மார்க்கம் மற்றும் மணப்பாறை, திண்டுக்கல் மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் இங்கு வந்து செல்கிறது.
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பொது மக்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பொது கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். பொது மக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டில் நவீன கட்டண கழிப்பிடம், இலவச பொது கழிப்பிடம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

