/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
/
கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
ADDED : செப் 01, 2024 04:18 AM
அரவக்குறிச்சி: கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்களால் மீட்-கப்பட்டார்.
அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி ராஜபேட்டை தெருவை சேர்ந்தவர் சாராம்மா, 30. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்-டவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள பழமையான கிணற்றின் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அப்-போது மண் சரிவு ஏற்பட்டு, சாராம்மா கிணற்றுக்குள் விழுந்-துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த, அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்-கினர். தண்ணீர் இல்லாமல் இருந்ததால், ஒரு மணி நேர போராட்-டத்திற்கு பிறகு சாராம்மாவை பத்திரமாக மீட்டனர். இப்பகுதி மக்கள், தீயணைப்பு துறை வீரர்களை பாராட்டினர்.