/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா மாணவ-, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி
/
விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா மாணவ-, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி
விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா மாணவ-, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி
விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா மாணவ-, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி
ADDED : ஆக 16, 2024 01:04 AM
கரூர்சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவ, -மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் தங்க வேல், தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரு பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஒருவருக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில், இருவருக்கும், தொழில் முனைவோர் மானிய கடன்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் இருவருக்கு கல்வி கடன் என மொத்தம், 21 பயனாளிகளுக்கு, 1.52 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்
தங்கவேல் வழங்கினார்.
பின், அரசு இசைப்பள்ளியின் வரவேற்பு நடனம், மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று பாடல் நடனம், வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கோலாட்டம், கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் நாட்டுப்புற நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ் (நிலம் எடுப்பு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* குளித்தலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., செந்தில்குமார், பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவிசெயற்பொறியாளர் அலுவலகத்தில் டி.எஸ்.ஓ., கோபி
கிருஷ்ணன் மற்றும் ஆர்.டி.ஓ.. தனலட்சுமி, தாசில்தார் சுரேஷ், நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறியாளர் செந்தில்குமரன், மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, யூனியன் குழு தலைவர்கள் தோகைமலை சுகந்தி சசிகுமார். குளித்தலை விஜய வினாயகம் மற்றும் பஞ்., தலைவர்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்தனர்.
மருதுார், நங்கவரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் நந்தகுமார், தலைவர் திருப்பதி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். நங்கவரம் மற்றும் மருதுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் காந்தரூபன் மற்றும் துணைத்தலைவர்கள் நாகராஜன். அன்பழகன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
* அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அரவக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில், கணக்குவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வேலுமணி தலைமையில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

