/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான வில் வித்தை போட்டி: 200 வீரர்கள் பங்கேற்பு
/
மாநில அளவிலான வில் வித்தை போட்டி: 200 வீரர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான வில் வித்தை போட்டி: 200 வீரர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான வில் வித்தை போட்டி: 200 வீரர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 26, 2024 02:27 AM
கரூர்: கரூர் அருகே நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்-டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஸ்பைடர் அகடாமி சார்பில், கரூர் திருகாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. அதில், ஆறு வயது முதல், 18 வயதுடைய, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்க-ளுக்கு இந்தியன், ரீ-கர்வ், காம்பவுன்ட் ஆகிய மூன்று பிரிவு-களில் வில்வித்தை போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்க-ளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. கல்வி அறக்கட்டளை தலைவர் ராமசாமி, சரவணன் பள்ளி முதல்வர் விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.