ADDED : ஆக 13, 2024 07:52 AM
கரூர்: கடவூர் அருகில் கொசூரை சேர்ந்தவர் ராஜ்வேல், 70, தமிழரசி, 63, ஆகியோர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும்போது, மயக்கமடைந்தனர். பின் அவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பின், அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்-தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கொசூர் தபால் நிலையத்தில் பணிபுரிந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றேன். எனக்கு மகள், மகன் என இருவர் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. அந்த பகுதியில் சிறிய வீடு கட்டி வசித்து வருகிறேன். எனது மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வீட்டை காலி செய்யும்படி, அவர் தொல்லை கொடுத்து வருகிறார். இது குறித்து போலீஸ், குளித்-தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறேன். என்னை தாக்கியதால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது வீட்டை பூட்டி விட்டு, என்னை நுழைய விடாமல் தடுத்து வருகின்றார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

