ADDED : ஆக 25, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, ஆக. 25-
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை, தேவஸ்தானம் கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் நிர்மலா, 45, கூலி தொழிலாளி, இவர் மகள் காவியா, 19, அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் காலை, 8:00 மணியளவில் கல்லுாரிக்கு சென்ற மகள் மாலை வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.