/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று முதல் புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை முறை அமல்
/
இன்று முதல் புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை முறை அமல்
இன்று முதல் புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை முறை அமல்
இன்று முதல் புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை முறை அமல்
ADDED : மே 06, 2024 02:20 AM
கரூர்: புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை முறை, இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.
வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால், காற்று மாசுபாடு ஏற்பட்டு, பொது மக்கள் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுக்குள் வைக்க, மாநிலம் முழுவதிலும், 534 வாகன புகை பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த வாகன புகை பரிசோதனை மையங்களில், பி.யூ.சி.சி., 2.0 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட மொபைல் உரிமதாரரால் பயன்படுத்தப்படும்.
இந்த செயலி நிறுவப்பட்ட மொபைல் தொடர்புடைய வாகன புகை பரிசோதனை மையத்திலிருந்து, 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். இதன் மூலம் வாகன புகை பரிசோதனை செய்யும் போது, இரண்டு புகைப்படங்களை (ஒன்று வாகனத்தின் பதிவெண்ணை தெளிவாக காட்டும் படியும், மற்றொன்று வாகனத்தின் பதிவெண், புகை பரிசோதனை மையத்தின் பெயர்பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒரு சேர இருக்குமாறு) எடுக்கப்பட வேண்டும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட நபர் அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை பதிவேற்றம் செய்யப்பட்டால் தான் புகைப் பரிசோதனை சான்றிதழை பதிவிறக்கம் செய்ய இயலும்.
இந்த புதிய நடைமுறை, இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மட்டுமே வாகன புகை பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் வாகன புகை பரிசோதனை மையங்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மூடி, 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.